தலிபான் அமைப்பின் பாகிஸ்தான் தலைவர் முல்லா பஸ்லுல்லா கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடத்திய வான் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர மத போதகரான முல்லா பஸ்லுல்லா ஐந்து வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றிருந்தார்.
பாகிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடிய மலாலா யூசுஃப்சாய் சுடப்பட்ட சம்பவம் மற்றும் 130க்கும் அதிகமான மாணவர்கள் கொல்லப்பட்ட பெஷாவர் பாடசாலைத் தாக்குதல் ஆகியவற்றுக்கு இவர்தான் காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்pபடத்தக்கது. எனினும் இது குறித்து தலிபான் அமைப்பு கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது