திருகோணமலை மாவட்ட இந்து அறநெறி விழிப்புணர்வு மாநாடு 15.06.2018 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் இருந்து ஆரம்பமாகிய பிரமாண்டமான பேரணி காலை 9.30 மணியளவில் உட்துறைமுகவீதியில் உள்ள இந்து கலாசார மண்டபத்தைச் சென்றடைந்தது. திருகோணமலை மாவட்டச் செயலகம், பாடசாலைகள், அறநெறிப் பாடசாலைகள், இந்து சமய அமைப்புக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இப்பேரணியை மேற்கொண்டனர்.
..
திருகோணமலை மேலதிக அரச அதிபர் கா.அருந்தவராசா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சின் முன்னாள் மேலதிகச் செயலாளர் உடுவை. சி.தில்லைநடராசா கலந்து கொண்டார். தொடக்கவுரையை உதவி மாவட்டச் செயலாளர் ந.பிரதீபன் ஆற்றினார். ஆசியுரையை பத்திரகாளி அம்மன் ஆலயப் பிரதம குரு வண.சோ. இரவிச்சந்திரக் குருக்கள் வழங்கினார். இந்து காலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் இ.கர்ஜின் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம், கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர்.
.
மட்டக்களப்பு காயத்திரி பீடத்தைச் சேர்ந்த சிவயோகச் செல்வர் சாம்பசிவ சிவாச்சாரியார் விசேட உரையாற்றினார்.
.
கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் சிறப்புச் சொற்பொழிவை ஆற்றினார்.
திருகோணமலையில் சிறப்புற இடம்பெற்ற அறநெறி மாநாடு
144
ஆசிரியர் ச.கோபிநாத் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதோடு நன்றியுரையையும் ஆற்றினார்.
Spread the love