இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் மீது சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கைக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3 ஆம் நாளான நேற்று சனிக்கிழமை போட்டி நடைபெறும் போது பந்தை சேதப்படுத்தியதாக போட்டி நடுவரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் உள்ளிட்ட குழுவினர் மைதானத்தை விட்டு வெளியேறியதனையடுத்து சுமார் 2 மணித்தியாலங்கள் போட்டி தடைப்பட்டது. அதன் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகத்தினர் தலையிட்டதனையடுத்து போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது