ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக அளிக்கப்படும் என, இந்தியாவின் அரியானா மாநில அரசு இன்று தெரிவித்துள்ளது. விளையாட்டு வீரர்கள் – வீராங்கனைகளை ஊக்குவிப்பதிலும், பேரிடர் மற்றும் விபத்துகளால் பாதிக்கப்படுவர்கள் மற்றும் எல்லைப்பகுதியில் வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு தாராளமாக நிதி உதவி அளிப்பதிலும் சாதனை படைத்துவரும், மனோகர் லால் கட்டார் தலைமையிலான, அரியானா மாநில அரசு இன்று மேலும் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.
அசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக அளிக்கப்படும். மேலும், மாநில அரசின் சார்பில் நியாயவிலை கடைகளுக்கான ஒதுக்கீட்டில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அரியானா மாநில சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.