டெல்லியில் ஆளுநர் வீட்டில் அமர்ந்து 8 நாட்களாக நடத்தி வந்த உள்ளிருப்பு போராட்டத்தை முதல்வர் கேஜ்ரிவால் முடித்துக் கொண்டார். ஐஏஎஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண ஆளுநர் உத்தரவிட்டதையடுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
டெல்லியில், கடந்த 3 மாதங்களுக்கு முன் தலைமைச் செயலாளரை ஆம்ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டமையினால் அமைச்சர்களுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தவிதமான ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.
மேலும், ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர துணை நிலை ஆளுநர் பைஜால் எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல், அவர்களைத் தூண்டிவிடுகிறார் என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சுமத்தியிருந்தது. எனினும் ஐஏஎஸ் அதிகாரிகள் தாங்கள் எந்தவிதமான போராட்டமும் நடத்தவில்லை என விளக்கம் அளித்துள்ளதனையடுத்து போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது
ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி துணை நிலை ஆளுநர் இல்லத்தில் 8 நாட்களாக அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் சில அமைச்சர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் குறிப்பிடத்தக்கது.