குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிங்கள சமூகத்திற்கு நல்லிணக்கம் பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள சமூகத்திற்கு நல்லிணக்கம் பற்றி சொல்லிக் கொடுக்கும் நோக்கில் கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்த மேற்குலக நாடுகள் உதவிகளை வழங்கி வருவதாகவும் இவ்வாறான விடயங்களை பார்க்கும் போது சிங்களவர்களின் பொறுமையை கோழைத்தனமாக கருதப்படுகின்றதாகவே தென்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் ந
டைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கம் தொடர்பில் தெற்கு சமூகத்திற்கு மட்டும் ஆலோசனைகள் அறிவுரைகள் அறிவுறுத்தல்கள் வழங்குவதனை நிறுத்திக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் வடக்கில் ஒரு சில அரசியல்வாதிகளும் புலிகளை மீள உருவாக்க வேண்டும் என நினைக்கும் சிறு தரப்பினரும் பாரியளவில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த முயற்சியை பெரும்பான்மை தமிழ் சமூகத்தினால் கட்டுப்படுத்த முடியும் எனவும் திட்டமிட்ட வகையில் செயற்பட்டு வரும் ஒரு குழு வடக்கின் முழுச் சமூகத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அதனை புரிந்து கொண்டு செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.