Home இலங்கைமன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் வேலையில்லா பட்டதாரிகள் கூடாரம் அமைத்து போராட்டம்

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் வேலையில்லா பட்டதாரிகள் கூடாரம் அமைத்து போராட்டம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் இன்று (21) வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடரங்களை அமைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.


கடந்த மாதங்களில் இடம் பெற்ற வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு சென்ற பட்டதாரிகளுக்கே இன்னமும் ஒழுங்கான பதிலே நியமனங்கள் வழங்கப்படாத நிலையில் அடுத்த கட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முக தேர்வுக்கான வர்த்தமானி அறிவிப்பு எதற்காக என அவர்கள் கேள்வி கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்ச்சியாக தாங்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்ற போதும் தங்களை அரசாங்கம் கண்டு கொள்வதில்லை அரசாங்கத்தினால் தாங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதாகவும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். இவ் செயற்பாடானது பட்டதாரிகளாகிய தங்கள் மத்தியில் பாரிய மன உளைச்சலை  ஏற்படுத்தியிருப்பதாகவும் குறித்த போராட்டமானது இன்றுடன் நிறைவடைவதா அல்லது தொடர்ச்சியாக நடைபெறுவதா என்பது அரசாங்கத்தின் கைகளில் தான் உள்ளது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More