குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரகசிய தொடர்பு எதுவும் கிடையாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இவ்வாறு குற்றம் சுமத்தும் டிலான் பெரேராவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரகசிய தொடர்பு பேணி வருவதாகவும் ஆட்சியில் இருந்த காலத்தில் ராஜபக்ஸக்களும் டிலான் பெரேராவை பயன்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்துள்ள அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களை உதாசீனம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவின் ஆசிகள் இன்றி எந்தவொரு தேர்தலிலும் பங்கேற்க வேண்டாம் என மக்கள் கோரி வருவதாகவும் ராஜபக்ஸக்களோ புதிய கட்சியின் உறுப்பினர்களோ ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரகசிய தொடர்பு பேணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.