Home இந்தியாஆளுனர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ள காஷ்மீரில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

ஆளுனர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ள காஷ்மீரில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

by admin


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுனர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மாநில ஆளுனர் மோரா அழைப்பு விடுத்துள்ளார்.  ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் பி.டி.பி கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கி கொண்டதனால், பி.டி.பி. கட்சி தலைவர் மெகபூபா முப்தி முதல்வர் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, காஷ்மீரில் ஆளுனர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மாநில ஆளுனர் வோரா அழைப்பு விடுத்துள்ளார்.

காஷ்மீரில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் மாநிலத்தின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக ஆளுனர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More