இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் முக்கிய நபராக செயற்பட்ட மத குருவுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2016-ம் ஆண்டு ஜகார்த்தாவில் ஐ.எஸ். அமைப்பினர் மேற்கொண்ட முதலாவது தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டிருந்ததுடன் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த தாக்குதலின் பின்னணியில் முக்கிய நபராக இருந்து செயல்படுத்தியதாக 46 வயதான அமன் அபுர்ரகுமான் என்ற மத குரு சிறைக்குள் இருந்தவாறே சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு ஜகார்த்தாவில் உள்ள நீதிமன்றில் விசாரணக்குட்படுத்தப்பட்ட போது அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய நீதிபதி அவருக்கு மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளார். எனினும் அமன் அபுர்ரகுமான், தன்மீது சுமத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சதி குற்றச்சாட்டை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது