பிரபல வைர வியாபாரி நிரவ் மோடிக்கு எதிரான வரி மோசடி வழக்கில் குஜராத் நீதிமன்றம் பிறப்பித்த பிறவிறாந்தினை மின்னஞ்சல் மூலம் அவருக்கு வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். பஞ்சாப் நஷனல் வங்கி மூலம் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபா அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடிக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமுலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டை விட்டு தப்பி ஓடிய அவரை கைது செய்ய சர்வதேச காவல்துறையினரின் உதவியும் நாடப்பட்டு உள்ள நிலையில் சுங்க வரி இல்லா இறக்குமதி பொருட்களை சட்ட விரோதமாக பயன்படுத்தி அவர் 52 கோடி ரூபா அளவில் வரி மோசடியில் ஈடுபட்டமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொடரப்பட்ட வழக்குகளில் அவர் முன்னிலையாகாத காரணத்தினால் நீதிமன்றம் பிறவிறாந்து பிறப்பிருந்தநிலையில் அந்த ஆணை அவருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது