செய்தி சேகரிக்கவும் தடை!
வவுனியா கூமாங்குளம் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இன்று (25.06.2018) பிற்பகல் 2மணியளவில் கைவிடப்பட்ட வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு சல்லடைபோட்டு பைக்கோ இயந்திரத்தின் உதவியுடன் வெடிபொருட்களைத் தேடி அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் செய்தி சேகரிக்க ஊடவியலாளர்கள் சென்றபோது அவர்கள் உள் நுழைய தடை விதிக்கப்பட்டது. குறித்த வீட்டினுள் வெடிபொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த வீடு சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டது. அங்கு வெடிபொருட்கள் எதுவும் மீட்கப்படவில்லை என்று இராணுவத்தினர் மற்றும் அதிரடிப் படையினர் கூறியுள்ளனர்.
இதேவேளை குறித்த பகுதியில் அண்மையில் விசேட அதிரடிப்படையினர் சென்று நீதிமன்றத்துடன் அனுமதியைப் பெற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோதும் எவ்விதமான வெடிபொருட்களும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.