Home இலங்கைபுதிய கட்சியில் இணைந்துகொள்வது குறித்து கூட்டாகவே தீர்மானிக்கப்படும் – பிரசன்ன ரணதுங்க:

புதிய கட்சியில் இணைந்துகொள்வது குறித்து கூட்டாகவே தீர்மானிக்கப்படும் – பிரசன்ன ரணதுங்க:

by admin

புதிய கட்சியில் இணைந்து கொள்வது குறித்து கூட்டாகவே தீர்மானிக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. இந்தக் கட்சியில் இணைந்து கொள்வது குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து தீர்மானிப்பர் என  மினுவன்கொடையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான ஆதரவு பாரியளவில் வீழ்ச்சியடைந்து செல்வதாகவும், தற்போதைய சுதந்திரக்கட்சித் தலைமை நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாவிட்டால் புதிய கட்சியில் இணைந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More