157
கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடெல் கஸ்ட்ரோவின் மறைவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கான கியூபா தூதரகத்திற்கு சென்று இரங்கல் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள கியூப தூதரத்திற்கு ஜனாதிபதி நேரில் சென்று இரங்கல் வெளியிட்டுள்ளார்.
தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் புத்தகத்தில் அவர் இவ்வாறு இரங்கல் வெளியிட்டுள்ளார். இலங்கைக்கான கியூப தூதுவர் Juana Elena Ramos Rodriguez ஜனாதிபதியை வரவேற்றுள்ளார். ஜனாதிபதி கியூப தூதுவருடன் சந்திப்பு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love