உலகம் முழுதும் கிரிக்கெட்டுக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்று ஐசிசி நடத்திய சந்தை ஆய்வில் சுமார் 100 கோடிக்கும் அதிகமாக ரசிகர்கள் கிரிக்கெட்டை விரும்புவது தெரியவந்துள்ளது, இதில் 90 வீதமானவர்கள் துணைக்கண்ட ரசிகர்கள் எனவும் 39 வீதமானோhர் ரசிகைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு 12 முழு உறுப்பு கிரிக்கெட் நாடுகள், சீனா, மற்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்டுள்ளது. சீனாவும் அமெரிக்காவும் கிரிக்கெட்டுக்கு பெரிய ஆதரவு இருக்கும் நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் ஐசிசி நடத்தும் தொடர்களுக்கே ஏகோபித்த வரவேற்பு இருப்பதாகவும் ஏனைய கிரிக்கெட் தொடர்களுக்கு ஐசிசி தொடர் அளவுக்கு வரவேற்பு இல்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஐசிசியின் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
95 வீதமான ரசிகர்கள் 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையையும் இருபதுக்கு இருபது உலகக்கோப்பையிலும் பெரிதும் ஆர்வம் காட்டியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 87 வீதமான கிரிக்கெட் ரசிகர்கள் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம்பெற வேண்டும் என கருதுகின்றனர் எனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது