Home இலங்கைமாணவியின் கொலையைக் கண்டித்தும், நடவடிக்கை எடுக்க கோரியும் வீதி மறியல்…

மாணவியின் கொலையைக் கண்டித்தும், நடவடிக்கை எடுக்க கோரியும் வீதி மறியல்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


சுழிபுரத்தில் பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாடசாலை மாணவர்களும் பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை ஏழு மணி முதல் சுழிபுரம் சந்தியில் வீதிகளை மறித்து போராடத்தை ஆரம்பித்துள்ளனர்.மாணவியின் கொலை தொடர்பில் அரசியல் வாதிகளே கல்வித்துறை சார் அதிகாரிகோ சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் குரல் கொடுக்கவோ நடவடிக்கை எடுக்கவோ இல்லை எனக் குற்றஞ்சாட்டியே இப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்கின்ற அனவரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருக்கின்றனர்.எனவே கல்வி அமைச்சு உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தர வேண்டுமென்று போராட்டக்கார்ர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

அவ்வாறு அவர்கள் வருகை தந்தாலே தமது போராட்டத்தை தாம் நிறுத்துவோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More