காணி பிணக்கு காரணமாக பெண் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனும் கோணத்தில் மானிப்பாய் காபவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் வயோதிப பெண்ணை பராமரித்து வந்த மற்றுமொரு வயோதிப பெண்ணை யாகசர் வேடம் தரித்த ஒருவர் வீடு புகுந்து கழுத்தறுத்து படுகொலை செய்திருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர். அதன் போது , படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு காணி பிணக்கு தொடர்பில் மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
குறித்த வழக்கில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு சாதகமான தீர்ப்பு வரவுள்ளதாக தெரியவந்துள்ளது. அதனால் குறித்த வழக்கின் எதிராளிகள் திட்டமிட்டு அப்பெண்ணை படுகொலை செய்திருக்கலாமோ எனும் கோணத்தில் வட்டுக்கோட்டை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
அதேவேளை மானிப்பாய் பகுதியில் இன்றைய தினம் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய யாகர் ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த யாசகரிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட போது , மனநோயாளி போன்று செயற்படுவதாகவும் , தொடர்ந்து தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.