Home சினிமாஆர்யா – இயக்குனர் பாலா ஆகியோருக்கெதிராக பிடியாணை

ஆர்யா – இயக்குனர் பாலா ஆகியோருக்கெதிராக பிடியாணை

by admin

நடிகர் ஆர்யா மற்றும் இயக்குனர் பாலா ஆகியோருக்கு அம்பாசமுத்திரம் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்போத்தி அகோரம் தயாரிப்பில், பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் என்ற திரைப்படத்தில், கதாநாயகனாக ஆர்யா நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் சிங்கம்பட்டி சமஸ்தானம் மற்றும் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் ஆகியவை குறித்து அவதூறாக காட்சிகள் உள்ளதாக தெரிவித்து 2013ல் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கில், 2 வாரங்களுக்கு முன்பு, ஆர்யா, பாலா, தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அவர்களின் மேலாளர் ஆகியோர் முன்னிலையாகியிருந்த நிலையில் குறித்த வழக்கு இம்மாதம் 22ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் அன்று, ஆர்யா, பாலா, தயாரிப்பாளர் ஆகியோர் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

எனினும் குறித்த திகதியில் மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகாதமையினைத் தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை முன்னிலைமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.  எனினும், நேற்றும் மூவரும் முன்னிலையாகவில்லை. இதையடுத்து நீதிபதி ஜூலை 13ம் திகதி மூவரும் முன்னிலையாக வேண்டுமென பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More