ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் ஊடாக இலங்கை அரசாங்கம் தனது சொந்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை, முழுமையாக நிறைவேற்றுமாறு இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் (David McKinnon) வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினை செயற்பட வைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார். சமரசம், நல்லிணக்கம் மற்றும் சட்டம் என்பன இலங்கையர் அனைவருக்குமான நலன்களை பலப்படுத்தும் என கனடா நம்பிக்கை கொண்டுள்ளது.
அனைத்துலக சமூகம், பூகோள அமைப்புகளுடன் மீண்டும் உறவுகளை ஏற்படுத்துவதில் இலங்கை முக்கியமான நகர்வுகளை எடுத்துள்ளதன்படி, தனது பொருளாதார உறவுகளை விஸ்தரிக்க முதலீட்டு வளங்களை பலப்படுத்தியுள்ளது. ஆகவே தொடர்ந்து இந்த பயணத் மேற்கொள்வதற்கு இலங்கைக்கு கனேடிய அரசாங்கம் தன்னால் முடிந்த உதவிகளை வழங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.