ரஸ்யாவில் ஓய்வூதியம் பெறுவோர்க்கான வயதெல்லையை உயர்த்தும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து 30 நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மொஸ்கோ நகரில் உலககிண்ண கால்பந்து போட்டிகள் ஆரம்பமான நாளன்று வெளியாகிய இந்த அறிவிப்பின்படி, ஆண்களுக்கான ஓய்வூதிய வயது 60லிருந்து 65 ஆகவும், பெண்களுக்கு 55லிருந்து 63 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கெதிராக 30 நகரங்களில் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை அதிக அளவான மக்கள் ஓய்வு பெறும் சூழ்நிலையையையும், தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையையும் சமாளிப்பதற்காக இந்த மாற்றம் அவசியமானது என ரஸ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது