தாய்லாந்தின் மா சே நகரில் குகை ஒன்றினுள் 8 நாட்களாக சிக்கிக் கொண்டிருந்த கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும், உதவிப் பயிற்சியாளரும் உயிருடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் தாய்லாந்தின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப்படையினர் என ஆயிரக்கணக்கானவர்கள் அந்நாட்டு பிரதமரின் நேரடித் தலையீட்டுடன் எடுத்த முயற்சி காரணமாக அவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
10 கி.மீ நீளம் உடைய இந்தக் குகைக்குள் கடந்த வாரம் 11வயது முதல் 16-வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியினரும் துணைப்பயிற்சியாளரும் 8 நாட்களாக சிக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியுள்ள கால்பந்து அணியும் உதவிப் பயிற்சியாளரும்
Jul 2, 2018 @ 03:24
தாய்லாந்தின் மா சே நகரில் கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும், உதவிப் பயிற்சியாளரும் குகை ஒன்றினுள் 8 நாட்களாக சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 10 கி.மீ நீளம் உடைய இந்தக் குகைக்குள் கடந்த வாரம் 11வயது முதல் 16-வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியினரும் துணைப்பயிற்சியாளரும் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற நாளில் இருந்து அங்குப்பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குகைப்பகுதி முழுவதையும் வெள்ள நீர் சூழ்ந்தனால் அவர்களால் குகையைவிட்டு வெளியேற முடியவில்லை.
குறித்த அணியைக் காணவில்லை என தொடர்ந்து தேடுதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில குகைப்பகுதி அருகே சிறுவர்களின் உடமைகள் காணப்பட்டதனையடுத்து அவர்கள் குகைக்குள் சென்றிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர் எனினும் அங்குப பருவமழை தீவிரமடைந்திருந்தமையினால் அங்கு மீட்புப்பணியை மேற்கொள்ள முடியவில்லை.கடந்த 8 நாட்களாகக் குகைக்குள் சிக்கி இருக்கும் அந்த குழுவினர் உயிருடன் இருக்கிறார்களா அல்லது உயிரிழந்துவிட்டார்களா என்கிற விவரம் ஏதும் தெரியவில்லை.
இந்தநிலையில் தற்போது மழை ஓய்ந்து வெயில்அடிக்கத் தொடங்கி இருப்பதால் தாய்லாந்தி ன் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டுத் மீட்புப்பணியை விரைவுப்படுத்தியுள்ளனர்.