பஞ்சாப் நஷனல் வங்கி நிதி மோசடியில் பிரதான குற்றவாளியாகக் கருதப்படும் வைர வியாபாரி நீரவ் மோடி , அவரது சகோதரர் மற்றும் அவரது நிறுவன தலைமை நிர்வாகி ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாக இன்டர்போல், சிவப்பு எச்சரிகை அறிவிப்பு விடுத்துள்ளது.
நீரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நஷனல் வங்கி மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாவினை சட்ட விரோத பண பரிமாற்ற மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நீரவ் மோடிக்கு சொந்தமான 3000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் அவரது கடவுச்சீட்டினையும் அமுலாக்கத்துறை முடக்கி உள்ளது.
எனினும் அவர் நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் தங்கிருப்பதாக தற்போது தெரிவிக்கப்படும் நிலையில் இங்கிலாந்து அரசை தொடர்பு கொண்டு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டது.
இதையடுத்து வௌ;வேறு கடவுச்சீட்டுக்களை டுகளை பயன்படுத்தி பல நாடுகளுக்கு பயணம் செய்து வருவதைத்தொடர்ந்து, தேடப்படும் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்குமாறு , அமுலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியன இன்டர்போலிம் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில், நீரவ் மோடியை கைது செய்வதற்கான நடவடிக்கையை இன்டர்போல் ஆரம்பித்து உள்ளது. நீரவ் மோடி, அவரது சகோதரர் நிஷால் மோடி, நிறுவன தலைமை நிர்வாகி சுபாஷ் பராப் ஆகியோருக்கு எதிராக சிவப்பு எச்சரிகை ;pறப்பிக்கப்பட்டு;ளளது.
அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கு அவரது புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை அனுப்பியுள்ள இன்டர்போல் அவர்களை கைது செய்யும்படி 192 உறுப்பு நாடுகளிடமும் கூறி உள்ளது. எனவே நிரவ் மோடி எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது