Home இந்தியாபிரபல பாடகி எஸ்.ஜானகி பற்றி வதந்தி பரப்பியவர்மீது சைபர் கிரைம் பொலீஸ் விசாரணை

பிரபல பாடகி எஸ்.ஜானகி பற்றி வதந்தி பரப்பியவர்மீது சைபர் கிரைம் பொலீஸ் விசாரணை

by admin

பிரபல பாடகி எஸ்.ஜானகி பற்றி உண்மைக்குப் புறம்பான வதந்தியை பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்காக கேரள மாநில சைபர் கிரைம் பொலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரபல சினிமா பின்னணி பாடகி எஸ்.ஜானகி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அத்துடன் நான்குமுறை தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். அவருக்கு தற்போது 80 வயது ஆகும் நிலையில் மகன் முரளி கிருஷ்ணாவுடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.

3 வாரங்களுக்கு முன்பு எஸ்.ஜானகிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினார். அதன்பிறகு அவரது உடல் நிலைகுறித்து அடிக்கடி வதந்திகள் பரவியது. கடந்த வாரம் 3ஆவது தடவையாக வதந்தி பரப்பப்பட்டது. ‘‘நான் நலமாக இருக்கிறேன். எனது உடல் நிலை குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்’’ என்று பாடகி எஸ்.ஜானகி வேண்டுகோள் வீடியோ நேர்காணல் ஒன்றையும் அவர் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் எஸ்.ஜானகி உடல் நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மலையாள சினிமா பின்னணி பாடகர்கள் சங்கத்தினர் கேரள பொலீசில்முறைப்பாடு செய்துள்ளனர் இதைத்தொடர்ந்து வதந்தி பரப்பிய வி‌ஷமிகளை கைது செய்யும்படி சைபர் கிரைம் பொலலீசுக்கு கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்னாத் பெஹரா உத்தரவிட்டு உள்ளார்.

எஸ்.ஜானகி உடல்நிலை குறித்த வதந்தி தமிழ் நாட்டில் இருந்து பரவியதா? அல்லது ஆந்திரா, கேரளாவில் இருந்து பரப்பப்பட்டதா? என்று சைபர் கிரைம்பொலீசார் வழக்குப்பதிவு செய்து எவிசாரணைகளை நடத்துகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More