ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த இரு மாதங்களில் ஊழல் குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருந்த நஜீப் ரசாக்கின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்ட தடுப்பு பிரிவு அதிகாரிகள் பெருந்தொகையான பணம், நகை உள்ளிட்ட ஆடம்பரப்பொருட்களை கைப்பற்றியிருந்தனர்.
இந்த குற்றச்சாட்டுகளை நஜீப் ரசாக் தரப்பு மறுத்து வந்த போதிலும், அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற நிலையில், இன்று பணமோசடி தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நஜீப் தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நாளை புதன்கிழமை பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற மலேசிய நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த நஜீப் ரசாக் பதவியிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது