250
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி நாச்சிக்குடா முஸ்லிம் கலவன் பாடசாலை வகுப்பறை கட்டட தொகுதி இன்று மாணவரின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 12 மணியளவில் இடம்பெற்றது. இந்திய இலங்கை நல்லுறவை வளர்க்கும் நோக்குடன் இந்திய மக்களின் நிதி பங்களிப்புடன் குறித்த புதிய வகுப்பறை கட்டட தொகுதி நிர்மானிக்கப்பட்டு இன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
8.5 மில்லியன் நிதியில் புதிதாக நிர்மாணி க்கப்பட்ட குறித்த கட்டடத்தொகுதி மற்றும் கணணி அறை ஆகியவற்றை யாழ் இந்திய துணை தூதுவர் எஸ் பாலச்சந்திரன் திறந்து வைத்தார். வகுப்பறை கட்டடத்தினை வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் யாழ் இந்திய துணை தூதுவர் எஸ் பாலச்சந்திரன், வடமாகாண கல்வி அமைச்சர் கெ.சர்வேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், ஆகியோர் கலந்துகொண்டனர்
Spread the love