சிறுவர்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் 6 மாதங்களில் 4,831 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் சிறுவர்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இந்த வருடத்தின் 6 மாத காலப்பகுதிக்குள் இது தொடர்பில் நான்காயிரத்து 831 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனைத் தெரிவித்துள்ள சபையின் பணிப்பாளர் நாயகம் அனோமா சிறிவர்தன சிறுவர் மீதான வன்முறைகள் தொடர்பில் 1,201 முறைப்பாடுகளும் வன்கொடுமை தொடர்பில் 581 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது வன்முறைகள் தொடர்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பில் பெற்றோர அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.