அமெரிக்காவின் நியூயோர்க் துறைமுகத்தில் இருக்கும் சுதந்திர தேவி சிலை தளத்தின் மீது பெண் ஒருவர் ஏறிப் போராட்டம் மேற்கொண்டதரைனயடுத்து சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவரை கீழே இறங்குமாறு காவல்துறையினர் கேட்டும் அவர் மறுத்துவிட்ட நிலையில் நான்கு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அவரைக்கைது செய்து கீழே இறக்கி கொண்டு வந்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அமெரிக்காவி்ல் குடியேற்றம் மற்றும் சுங்க அமுலாக்கத்துறை முகவர் முறையை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிலைமீது ஏறி போராட்டம் நடத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சுதந்திர தேவி சிலை மீது குறித்த பெண் ஏறிய்மை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது