2018ம் ஆண்டிற்கான அகில இலங்கைத் தமிழ்மொழித்தின இறுதிப் போட்டிகள் யூலை மாதம் 14,15ம் திகதிகளில் கல்வியமைச்சிலும் 21,22ம் திகதிகளில் கொ / பம்பலபிட்டி இந்துக் கல்லூரியிலும் நடாத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
போட்டிகள் தொடர்பான அறிவுறுத்தல்கள்
1. ஓவ்வொரு தினமும் போட்டிகள் காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகும்.பதிவுகள் யாவும் காலை 08.30 மணிக்கு ஆரம்பமாகும்.
2. போட்டிக்கு வருகை தரும் மாணவர்கள் படசாலை சீருடையில் மட்டுமே வருகை தரல் வேண்டும்.(இசையும் அசைவும் போட்டி தவிர)
3. போட்டிகளுக்கு வருகை தரும் மாணவர்களுடன் வரும் உதவியாளர்கள் கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவால் குறிப்பிடப்படும் எண்ணிக்கைக்கு அமைய இருத்தல் வேண்டும்.மேலும் மாணவருடன் அனுப்பும் உதவியாளர்கள் தொடர்பாக முழுப் பொறுப்பையும் அதிபரே ஏற்க வேண்டும்.
4. உதவியாளர் தொகைக்குள் பொறுப்பாசிரியரும் அடங்குவர் உதவியாளர் மற்றும் பொறுப்பாசிரியரின் பெயர்ப்பட்டியல் அதிபரால் அத்தாட்சிப்படுத்தப்பட்டு அனுப்பப்படல் வேண்டும். பெற்றோர்கள், சிறுகுழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
5. போட்டியாளர்கள் அமையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அதிபரிடமிருந்து கடிதம் கொண்டு வரல் வேண்டும். தேசிய அடையாள அட்டை, தபால் அடையாள அட்டை உள்ள மாணவர்கள் அவற்றினை சமர்ப்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியம்.
6. யூலை மாதம் 14,15ம் திகதிகளில் இடம்பெறும் போட்டிகளில் பங்குகொள்ளும் தூரப்பிரதேச போட்டியாளர்களுக்கு தங்குமிட வசதிகள் தேவைப்படின் மாத்திரம் அப்பாடசாலையின் அதிபர் யூலை மாதம் 10ம் திகதிக்கு முன்னர் 0112784176 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறியத்தரவும்.
7. யூலை மாதம் 21,22ம் திகதிகளில் இடம்பெறும் போட்டிகளில் பங்கு கொள்ளும் போட்டியாளர்களுக்கு பின்வரும் அடிப்படையில் தங்குமிட வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆண் மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள் – கொ/பம்பலபிட்டி இந்துக் கல்லூரி
பெண் மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள் – கொ/பம்பலபிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி
8. நடுவர்கள், இணைப்பாளர்கள் தவிர்ந்த வேறெந்த நபரும் போட்டி நடைபெறும் மண்டபம் மற்றும் பாடசாலை வளாகத்திற்குள் காரணமின்றி நடமாட அனுமதிக்கப்படமாட்டார்கள். அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களிலேயே இருத்தல் கட்டாயமானது.
9. குழு நிகழ்ச்சிக்காக வருகை தரும் மாணவர்களும், ஆசிரியர்களும் தங்கும் பாடசாலையின் சுத்தம் மற்றும் பாடசாலையின் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும். அதிபர்கள் தத்தமது மாணவர்களுக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
10. மேலதிக தகவல்களுக்கு 0112784176 (காலை 08.30 – 04.30 வரையான அலுவலக நேரத்தில் மாத்திரம் தொடர்பு கொள்ளவும்) போட்டி நடைபெறும் தினங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.
கடந்த வாரங்களில் தபால் பகிர்ந்தளிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இதுவரை கடிதங்கள் கிடைக்க பெறாத பாடசாலைகள் கல்வி அமைச்சுடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்கப்படுகின்றார்கள்.