பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரிபுக்கு 10 வருட சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட அவரது தண்டனையை நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
லண்டன் அவன்பீல்ட் அடுக்குமாடி குடியிருப்பில் ஊழல் பணத்தினைக் கொண்டு வீடுகளை கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரித்த நீதிமன்றம் ஏற்கனவே 4 முறை தீர்ப்புபினை ஒத்தி வைத்தநிலையில், இன்று இவ்வாறு தீர்ப்பினை வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை அவரது மகள் மர்யம் நவாசுக்கு 7 வருடங்கள் சிறை தண்டனையும் நவாஸின் மருமகன் சாப்தாருக்கு ஒரு வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
அத்துடன் நவாஸ் செரிபுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களும் மர்யம் நவாசுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது தற்போது, லண்டனில் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து வரும் மனைவி குல்சோம் நவாஸை கவனித்து கொள்வதற்காக, நவாஸ் செரிப் மற்றும் மர்யம் நவாஸ் லண்டனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.