கிரிக்கெட் விளையாட்டின் போது பந்தைச் சேதப்படுத்தும் குற்றத்துக்காக, வீரர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை மேலும் அதிகரிப்பது குறித்து, சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை (ஐசிசி) ஆலோசனை நடத்தியுள்ளது
இதன்படி பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வீரர் ஒருவருக்கு, 6 டெஸ்ட் போட்டிகளில் அல்லது 12 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை தெரிவித்துள்ளது.
முன்னர் பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டை எதிர்நோக்கிய வீரருக்கு, ஒரு போட்டியில் பங்கேற்பதற்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டு வந்தநிலையில் தற்போது தண்டனை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது