தாய்லாந்தில் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதனை அடுத்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணி இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் மா சே நகரில் குகை ஒன்றினுள் சிக்கிக் கொண்டிருந்த கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும், பயிற்சியாளரும் உயிருடன் இருப்பது 9 நாட்களின் பின்னர் கண்டறியப்பட்ட போதிலும் அவர்களை மீட்க சில மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன
மேலும் சிறுவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படையினர், முன்னாள் கடற்படை வீரர்கள், சர்வதேச நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்தநிலையில் திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்ததனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை மீட்பதற்கு கடும் சவால்களை சந்தித்து வருவதுடன் ஒட்சிசன் பற்றாக்குறையால் நேற்று மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார்
இந்த நிலையில், அப்பகுதியில் மேலும் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதுடன் மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது