( Riek Machar, left, and President Salva Kiir, right)
தெற்கு சூடானில் போராளிகளுடன், அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள அரசு இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உகாண்டாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராளி இயக்கத் தலைவரான ரிக் மச்சாRiek Machar (Riek Machar) ஐ மீண்டும் அந்நாட்டின் துணை ஜனாதிபதியாக நியமிக்க தெற்கு சூடான் ஜனாதிபதி சால்வா கிர் (Salva Kiir) ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடுவதாகக் தெரிவித்து கடந்த 2013 ஆம் ஆண்டு ரிக் மச்சாரை, ஜனாதிபதி சால்வா பதவிவிலக்கியதனையடுத்து இ அங்கு ஏற்பட்ட ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இந்தநிலையில் நிரந்தர அமைதிக்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பும் ; கடந்த வாரம் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது