உத்தர பிரதேச மாநிலத்தில் மாபியா குழுவின் தலைவரான முன்னா பஜ்ரங்கி என்பவர் சிறைச்சாலை வளாகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைது செய்யப்பட்ட முன்னா பஜ்ரங்கி ஜான்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் வழக்கு விசாரணை ஒன்றுக்காக முன்னா பஜ்ரங்கியை இன்று காலை பக்பத் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்வதற்காக அழைத்து வரும் போது அங்கிருந்த மற்றொரு கைதியினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பலத்த பாதுகாப்பையும் மீறி சிறைச்சாலைக்குள் உள்ள கைதிக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.