Home பிரதான செய்திகள்இலங்கை கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராக திலான் சமரவீர?

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராக திலான் சமரவீர?

by admin


தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டிகளுக்கு இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் டெஸ்ட் வீரர் திலான் சமரவீர நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அணியின் முகாமையாளராக கிரஹம் லப்ரோய் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின்போது இலங்கை அணித்தலைவர் தினேஸ் சந்திமல் பந்தினை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த மூவருக்கும் சில போட்டிகளில் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் புதிய பயிற்றுவிப்பாளர் மற்றும் முகாமையாளர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More