152
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற உறுப்பினர்கள் வசதிகளை எதிர்பார்க்கக் கூடாது என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் மட்டுமன்றி நாமும் அர்ப்பணிப்புக்களை செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர் ஒன்பது லட்சம் கோடி ரூபா கடன் பெற்றுக்கொண்டுள்ள நாடாக இலங்கை திகழ்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். சமுர்த்தி நலன் திட்டம் செல்வந்தர்களுக்கு கிடைக்கப் பெறுவதாகவும் இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love