Home இலங்கைகொல்லப்பட்டவரின் மனைவியும் காதலனும் கைது…

கொல்லப்பட்டவரின் மனைவியும் காதலனும் கைது…

by admin


கொழும்பை அண்மித்த கிரிபத்கொட, நாஹேன பகுதியில் முச்சக்கர வண்டியில் வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் உயிரிழந்திருந்த சம்பவத்தில் அவரது மனைவியும் மனைவியின் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிரிபத்கொட, நாஹேன பகுதியில் முச்சக்கர வண்டியில் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஒருவரது சடலம் நேற்று காலை (10.06.18) மீட்கப்பட்டிருந்தது. ஹுனுபிட்டிய, நாஹேனவத்த பகுதியை சேர்ந்த 40 வயதுடைய தனுஷ்க தரங்க என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் வத்தள, ஹெந்தல சந்தியில் முச்சக்கர வண்டி ஓட்டுபவர் என்றும் அவருடைய வீட்டிற்கு வந்த இருவரினால் அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை அடுத்து கொல்லப்பட்டவரின் மனைவியும், அவரது காதலனும், கிரிபத்கொட காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More