குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பிரதி அமைச்சர் நளின் பண்டார காவல்துறை மா அதிபர் பூஜீதஜெயசுந்தர ஆகியோர் யாழ் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளனர். இந்தப் பயணத்தின் போது காவல்துறை அதிகாரிகளுடனான கலந்திரையாடலிற்காக காவல்நிலையம் நிலையம் சென்ற அமைச்சருக்கு காவல்துறை அணிவகுப்பும் மரியாதையும் வழங்கப்பட்டது.
யாழில் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்ற குற்றச் செயல்கள் தொடர்பில் பலராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந் நிலையிலையே இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காகவே அமைச்சர் , காவல்துறைமா அதிபர் யாழ் சென்றுள்ளனர்.
இதன் போது காவல்துறை அதிகாரிகளையும் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் வடக்கு முதலமைச்சர் மற்றும் வடக்கு ஆளுநர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.