Home இலங்கை கலை நகரில் புரவி ஆட்டத்துடன் நேருஜி கலாமன்றம் அங்குரார்ப்பணம்(படங்கள்)

கலை நகரில் புரவி ஆட்டத்துடன் நேருஜி கலாமன்றம் அங்குரார்ப்பணம்(படங்கள்)

by admin

யாழ்ப்பாணம் வட்டுக் கோட்டை கலைநகரில் புரவி ஆட் டத்துடன் நேருஜி கலாமன்றம் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு கடந்த பத்தாம் திகதி மாலை ஐந்து மணிக்கு நேருஜி சனசமூக முன்றலில் இடம்பெற்றது .

சனசமூக நிலைய தலைவர் தெ .கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் த.நடனேந்திரன் பிரதம அதிதியாகவும், பிரதேச கலாசார அலுவலர் அ .அமலதாஸ் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்,

மேலும் ஆசிரியர் திவாகரனின் இறைவணக்கத்துடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் விதிகள் யாப்புகளுக்கு அமைவாக கலாமன்றங்களை பதிவு செய்யும் நடவடிக்கையின் பிரகாரம் கடந்த 1956 .10.19 இல் ஆரம்பிக்கப் பட்ட நேருஜி சனசமூகத்துடன் இணைந்து கடந்த 10.07.2018 இல் நேருஜி கலாமன்றம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

வட்டுக் கோட் டையில் பாரம்பரிய கலைஞர்களால் ஆடப்பட்டு வந்த புரவி ஆட்டம் போருக்கு பின்னான காலப்பகுதியில் ஆடப்படமுடியாத சூழல் ஏற்பட்ட போதும் அதனை நலிவடைய விடாமல் இளம் சமூகத்திடம் கையளிக்கும் வகையில் அருளம்பலம் குழுவினரின் புரவி ஆட்டமும் ஆடப்பட்டது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியும் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளருமான நாடனேந்திரன் உரையாற்றுகையில் ,
கலை நகர் என்ற சிறப்புப் பெயரைக் கொண்ட இக்கிராமம் கலைச் செயற்பாட்டின் தேவை கருதி கலாமன்றத்தினை ஆரம்பிப்பது மகிழ்வுக்குரியது .மங்களகரமான முறையில் ,பண்பாட்டு அடையாளங்களுடன் ஆரம்பிக்கப் படும் இக் கலா மன்றம் இலைமறை காயாக உள்ள கலைஞர்களை வெளிக்கொணர பாடுபட வேண்டும், எமது பாரம்பரிய கலை வடிவங்களான கூத்து ,நாடகம், ஆகியவற்றை மீண்டும் மீண்டும் வெளிக்கொணர முன்வரவேண்டும், இன்று நாம் தொலைக்க காட் சியில் நாடகம் பார்ப்பதும் , முகநூலில் இணையங்களில் தேடலை நகர்த்தி நேரங்களை வீணடிப்பதுடன் எமது பாரம்பரியங்களை மறந்து வருகின்றோம்,இதனால் எமது பாரம்பரிய கலை வடிவங்களை வடக்கில் மட்டுமல்லாமல் இலங்கையிலேயே பரப்ப வேண்டிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது .

ம க்களின் உள்ளக் கிடக்கைகளை சமுதாய சீரழிவுகளை வெளிப்படுத்தும் இடமாக கலைகள் உள்ளன ,போராட்ட கால சூழலில் மக்களை விழிப்புணர்வூட்ட நாடகக் கலையை பயன்படுத்தினார்கள், புக்காரா விமானம் குண்டு போடும் காலப் பகுதியில் என்னை புக்காராவாக சோடித்து நடிக்க வைத்தார்கள்.அப்படி காலத்தை பிரதிபலிக்கும் வகையில் கலைகள் உள்ளன . கலையை கட்டி வளர்க்க வேண்டிய தேவை எமக்குண்டு, புலம்பெயர் தேசத்தில் கூட எம் கலைகளை வெளிப்படுத்தி வருவதுடன் அவற்றை சமூகவலைத்தளங்கள் ஊடாக பரப்பி வருகின்றனர் , அந்தவகையில் சமூக சீரழிவுகளை அழி ப்பதன் பொருட்டு ஒழிப்பதன் பொருட்டு மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இக்கலை மன்றம் உதவ வேண்டும் எனக்கோரிக்கை விடுத்தார்,

இந்த நிகழ்வின் அங்கமாக நேருஜி கலை மன்ற தலைவராக தி.கஜேந்திரன் , துணைத் தலைவராக தா.குமரதாசன், செயலாளராக போ ,திவாகரன் , உப செயலாளராக தி.இளங்குமரன், பொருளாளராக ச.லோகநாதன் ,கணக்காய்வாளராக தெ .ரவீந்திரன் ஆகியோருடன் செயற்குழு உறுப்பினர்களாக ந.ரஜீவ் பொ .கோவை ஆனந்த் , சி.குகதாஸ் , சி.சிவதாசன் ,திருமதி இ .கோமதனி , மற்றும் திருமதி லோ .யதீசா ,ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இறுதியில் அவையினோர் பாராட்டும் வகையில் புரவி ஆட்டமும் இடம் பெற்றது.

[தொகுப்பு ; யாழ்.தர்மினி பத்மநாதன் ]

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More