தமிழ் திரைப்படங்களில் காண்பிக்கப்படும் வன்முறைகளே ஆவா குழுவினரின் வன்முறைக்கு காரணம் என இலங்கையின் சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
தமிழ்திரைப்படங்களில் காண்பிக்கப்படும் வன்முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் ஆவா குழுவினர் பின்னர் கொள்ளைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் சிரேஸ்ட காவல்துறை அதிகாரிகள் அங்குள்ள நிலைமை குறித்து தனக்கு எடுத்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் ஆவா குழுவினர் வாள்களை பயன்படுத்தி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஊடகங்களும் அரசியல் எதிராளிகளும் தெரிவிப்பது போன்று நிலைமை அவ்வளவு மோசமானதாகயில்லை எனத் தெரிவித்த அமைச்சர், கடந்த வருடம் மாத்திரம் வடபகுதியில் 3000 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
1 comment
‘ஆடத் தெரியாதவள் மேடை சரியில்லை’, என்று சொன்ன கதையை ஒப்புவிப்பதாகவே திரு. மத்தும பண்டாரவின் கருத்து அமைகின்றது. இதை ஆட்சியாளர்களின், ‘கையாலாகாத்தனம்’, என்று சொன்னாலும், அது தவறாகாது.
அமைச்சரின் பார்வையில், ‘மோசமான நிலமை’, என்பது, எத்தனை வாள்வெட்டுச் சம்பவங்களை அல்லது உயிர்ப் பலிகளைக் கொண்டதாக இருக்க வேண்டுமென்பதை அவரே அறிவார்?
தமிழ்ச் சினிமாக்களை சாடும் இவருக்குத் தனது பாதுகாப்புப் படைகளால் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது போனமைக்கான காரணத்தை ஏன் கூற முடியவில்லை? தனது திறமையற்ற இராணுவத்துக்கு வருடா வருடம் கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை விரயமாக்கி நிதியொதுக்கீடு செய்வது, அனாவசியமென்று இன்னுமா புரியவில்லை?