Home இலங்கைகோத்தபாய அலுகோசு (தூக்கிலிடுபவர்) பதவிக்கு பொருத்தமானவர்!

கோத்தபாய அலுகோசு (தூக்கிலிடுபவர்) பதவிக்கு பொருத்தமானவர்!

by admin

பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த…

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அலுகோசு (தூக்கிலிடுபவர்) பதவிக்கே மிகவும் பொருத்தமானவர் என பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த தெரிவித்துள்ளார். பெல்மதுளை, ரில்லேன பௌத்த விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் ஜனாதிபதி கதிரையில் அமரவேண்டும் என்று கோத்தாபய ராஜபக்ஸ அடம்பிடித்து வருவதாக தெரிவித்த அவர் இலங்கையில் ஜனாதிபதியை தெரிவு செய்வது மஹிந்த ராஜபக்ஸ அல்ல என்றும் நாட்டு மக்களே தெரிவு செய்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.

தற்போது தாமரை மொட்டு கட்சிக்குள் பிரச்சினை எழுந்துள்ளதாகவும் ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதே அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினை என்றும் கூறிய பிரதியமைச்சர் எது எப்படியோ ராஜபக்ஸர்களில் ஒருவரைத்தான் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்போவதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கதிரைக்கு ஆசைப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ சிறைச்சாலையில் வெற்றிடமாக உள்ள அலுகோசு (தூக்கிலிடுபவர்) அலுகோசு (தூக்கிலிடுபவர்) பதவிக்கே மிகவும் பொருத்தமானவர் என்றும்போகம்பர சிறைச்சாலையில் வெற்றிடமாக உள்ள இரண்டு அலுகோசு பதவிகளுக்கு அவர் விண்ணப்பிக்கலாம் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More