அகதிகள் விவகாரம் தொடர்பில் பெற்றோரிடமிருந்து பிரித்த குழந்தைகளை மீளப் பெற்றோருடன் இணைக்க ஏற்படும் செலவினை அமெரிக்க அரசாங்கம்தான் ஏற்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
மெக்சிகோவிலிருந்து அமெரிக்க எல்லைக்குள் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக நுழைந்த அகதிகளின் சுமார் இரண்டாயிரம் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து தடுத்து வைக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டிருந்தது. இதற்கெதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில் டரம்ப் அதனை மீளப் பெற்றிருந்தார்.
இந்தவிவகாரம் தொடர்பில் அமெரிக்க மனித உரிமை ஒன்றிம் தொடர்ந்த வழக்கு கலிபோர்னிய நீதிமன்றில் விசாரணைக்கு வந்த நிலையில் பிரித்து வைக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் பெற்றோர்களுடன் இணைப்பதற்கான செலவை பெற்றோர்கள் வழங்கத் தேவையில்லை எனவும் அமெரிக்க அரசுதான் , ஏற்க வேண்டும் எனவும் நீதிமன்ற்ம் உத்தரவிட்டுள்ளது
ஒரு குழந்தையை பெற்றோருடன் இணைப்பதற்கு பெற்றோர் 1900 டொலர்கள் வழங்க வேண்டுமும் என அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.