சிங்கள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதையின் அறிமுக நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
சாமிநாதன் விமல் மொழிபெயர்த்த கௌஷல்ய குமாரசிங்ஹவின் “இவ்விரகசிய சாரளத்தால் உற்றுநோக்கின்” (நாவல்) மற்றும் பிரபாத் ஜயசிங்ஹவின் “மகர தோரணம்” (சிறுகதைகள்) , சிவலிங்கம் அனுஷா மொழிபெயர்த்த நிஷ்ஷங்க விஜேமான்னவின் “தாரா ஷியாமலீ குமாரசுவாமி” (நாவல்) ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வே நடைபெறவுள்ளது.
யாழ்.பல்கலைகழக கலைப்பீட புதிய கட்டடத்தின் 408ஆம் இலக்க மண்டபத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
அந்நிகழ்வில் கலாநிதி அதுலசிறி சமரகோன் (விரிவுரையாளர், திறந்த பல்கலைக்கழகம்), கலாநிதி சுமதி சிவமோகன் (விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம்), மகேந்திரன் திருவரங்கன் (விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர்.
“இவ்விரகசிய சாரளத்தால் உற்றுநோக்கின்” (நாவல்) 500 ரூபாய் – அன்றைய தினம் 400 ரூபாவிற்கு “தாரா” 450 ரூபாய் – அன்றைய தினம் 350 ரூபாவிற்கு “மகர தோரணம்” (சிறுகதைகள்) 400 – அன்றைய தினம் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.