தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது வடகிழக்கு வங்கக்கடலில் ஒடிசாவை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவி வருகின்ற காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
வலுவான தென்மேற்கு பருவக்காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகம் வரை வீசும். இந்த காற்றின் வேகம் 60 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் அலைகளின் உயரம் அதிகரிக்கும். எனவும் தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் வங்கக்கடலின் ஆழமான பகுதிகளில் கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்படும் என்பதனால் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.