நாட்டின் பாதுகாப்புக்காக, இராணுவத்தை ஈடுபடுத்தும் அதிகாரம் அரசியலமைப்புக்கமைய ஜனாதிபதிக்கே உள்ளதெனவும் இராணுவம் அல்லது அரச அதிகாரிகள் தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இல்லை எனவும் அமைச்சர் சரத் அமுனுக தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் பரகாரம் பாதுகாப்புப் பிரிவு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்துக்கு உட்பட்டதாகும் என்பதுடன் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவNது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் வரை, கூட்டு அரசாங்கத்தின் ஆட்சியே தொடருமெனவும் குறிப்பிட்ட அமைச்சர் சரத் அமுனுகம தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைக்கு அமைய, எந்த ஒரு கட்சியாலும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறமுடியாது எனவும் குறநிப்பிட்டுள்ளார்.