குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கில் சாதாரண மக்களையும் இராணுவத்தினரையும் பிரித்து இருத்தரப்புக்கும் இடையில் இருக்கும் நெருக்கமான தொடர்புகளை சீர்குலைக்கும் பெரும் தேவை, முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு இருப்பதாக இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கில் உள்ள அரச அதிகாரிகள் தன்னிடம் கேட்காமல் வடக்கில் இராணுவத்தினருக்கு எந்த தகவல்களையும் வழங்க வேண்டாம் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இராணுவ தளபதி சேனாநாயக்க, முதலமைச்சரின் இந்த கருத்து கவனத்தில் கொள்ள வேண்டியளவில் முக்கியத்துவமிக்க கருத்து அல்ல.
அதேபோல் வடக்கில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் பணிகளுக்கு முதலமைச்சரின் கருத்து எவ்விதமான தடைகளையும் ஏற்படுத்தாது. அத்துடன் இராணுவத்தினரும் தமது பணிகளை நிறுத்த போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.