குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலும் முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு ரத்துபஸ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டமொன்றின் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்த அனுமதிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபராக அனுர சேனாநயாக்க கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ம் திகதி முதல் 8ம் திகதி வரையில் அனுர சேனாநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர்.