அபுதாபி ஆட்சியாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து என கூறி ஐக்கிய அமீரக இளவரசர் ஷேக் ரஷித் பின் அல்-ஷாரிக் கட்டாரில் தஞ்சமடைந்துள்ளார். ஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் ஒருவரின் 31 வயது இளைய மகனான ஷேக் ரஷித் பின் அல்-ஷாரிக், ஐக்கிய அமீரக அரசு மீது பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி விட்டு நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். ஐக்கிய அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் ஆட்சியாளர்கள் தம்மை மிரட்டி வருவதாகவும், உயிருக்கு ஆபத்து இருப்பதால் கட்டாரில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எனினும் அல்-ஷாரிக்கின் குற்றச்சாட்டுக்கு ஐக்கிய அமீரக வெளியுறவு அமைச்சர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்துக்கு துணை போவதாக கூறி கட்டாருடனான தூதரக ரீதியிலான உறவை கடந்தாண்டு ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட சில நாடுகள் துண்டித்தது குறிபிடத்தக்கது.