அமெரிக்க மற்றும் ரஸ்ய ஜனாதிபதிகளிடையே இன்று நடைபெற்ற உயர்மட்ட நேரடி பேச்சுவார்த்தை வெற்றிகரமாகவும், பயனுள்ள வகையில் அமைந்ததாகவும் இருவரும் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர். இன்றையதினம் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கி நகரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இந்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க தேர்தலில் ரஸ்யாவின் தலையீடு மற்றும் சிரியப்பிரச்சனை பல முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.
இரு கட்டமாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருவரும்; கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த நிலையில் பனிப்போர் நிலவிய காலத்துக்கு பின் நடந்துள்ள இந்த சந்திப்பு வெற்றிகரமாக நடந்துள்ளதாக இருவரும் கருதுகிறோம்.இரண்டு மிகப்பெரிய அணு ஆயுத நாடுகளான அமெரிக்காவுக்கும், ரஸ்யாவுக்கும் சர்வதேச பாதுகாப்பை கவனிப்பது பொறுப்பாக உள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஸ்யாவின் தலையீடு எந்த விதத்திலும் இல்ஐல என புட்டின் தெரிவித்தார்.
அதேவேளை நடந்து முடிந்துள்ள இந்த சந்திப்பு வெளிப்படையாகவும், ஆழமானதாகவும், நேரடியானதாகவும் இருந்தது எனவும் இந்த சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும் என முழுமையாக நம்புகிறேன் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளர்h.