கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் தமிழர் பண்பாட்டுப் பண்டிகையான ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. இன்று ஆடிப்பிறப்பாகும். இதனை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் இடம்பெற்றது.
அந்த வகையில் கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியிலும் ஆடிப்பிறப்பு கொண்டாட்டத்தை மாணவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து வகுப்பறை முற்றங்களில் பானை வைத்து ஆடிக்கூழ் காய்ச்சி கொளுக்கட்டை அவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழர்கள் தமது பண்பாட்டு விழாவாகவும் இயற்கை சார்ந்த வழிபாட்டு விழாவாகவும் கொண்டாடி வரும் ஆடி முதல் நாளான ஆடிப்பிறப்பு குறித்தும் அன்றைய தினம் முன்னெடுக்கப்படும் பண்பாட்டு நடைமுறைகள் தொடர்பிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கமளித்தனர்.