பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளன. மத்திய அரசுக்கு எதிராக இந்த கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சியினரை சந்தித்து ஆதரவு கேட்டு வந்தார்.
இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாமல் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. பெரும்பாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான அறிவிப்பினை நாளை சபாநாயகரிடம் கையளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது